எட்டா கனியாகும் “தங்கம்”

கடந்த 40 நாட்களாகவே உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஆபரண தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை எட்டியுள்ளதால் பொதுக்கமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எட்டா கனியாகும் “தங்கம்”

கடந்த 40 நாட்களாகவே உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஆபரண தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை எட்டியுள்ளதால் பொதுக்கமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்தியாவின் பொருளாதாரம் தற்போது சரிவை நோக்கி செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில்,
ரூபாய் நோட்டு சரிவு மற்றும் அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் 40 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.3640 அதிகரித்தது . அப்படிப்பட்ட தங்கத்தின் விலை நேற்றைய தினம், வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதாவது, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ 30,120க்கு விற்பனையானது. அதுபோல் ஒரு கிராம் தங்கம் ரூ 3,765க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நேற்று மாலையே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.29,928க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.24 குறைந்து ரூ.3,741க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.96 வரை உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலையானது ரூ3,753ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.30,024 ஆகவும் உள்ளது.

24 கேரட் அளவிலான தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.3,910 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் ரூ.31,280 ஆகவும் உள்ளது. வெள்ளி விலையானது இன்று கிராமுக்கு 55.00 காசுகளாகவும், கிலோ வெள்ளி ரூ.55,000 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் பவுன் ரூ.40 ஆயிரத்தை தொட வாய்ப்புள்ளதால் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் தங்கத்தின் விலை உயர்வு தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.